கென்யாவைச் சேர்ந்தவர் டேவிட் கேரோ, இவருக்கு வயது 32. இவர் காலையில் எழுந்து பல் துலக்கும் போது தவறுதலாக டூத்-ப்ரஷ்ஷையே விழுங்கிவிட்டாராம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுங்கிய டூத்-ப்ரஷ் அவரது உணவுக் குழாயில் சிக்கி கொண்டது. இதையடுத்து அவருக்கு கடுமையான வாயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் கொடுத்து பிரஷ்ஷை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்த முறை பயனளிக்கவில்லை.


பின்னர் அவருக்கு சுமார் 45 நிமிட அறுவை சிகிச்சை செய்து அந்த  அறுவைசிகிச்சை டூத்-ப்ரஷை அகற்றியுள்ளனர். சிகிட்சைக்கு பின்னர் அவரை சிறிது காலம் திரவ உணவு மட்டுமே உண்ண வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 



இந்த நிகழ்வு தொடர்பாக டேவிட் கேரோ அருத்துவர்களிடம் கூறிய பொது...! 


என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் பிரஷ் செய்து கொண்டே இருந்தேன். பின்னர் திடீரென்று தவறுதலாக அதை விழுங்கிவிட்டேன். இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. இந்த நிகழ்வின் பொது என் அருகில் கூட யாரும் இல்லை என்று புலம்புயுள்ளார் டேவிட்.


டூத்-பிரஷ்ஷை தவறுதலாக விழுங்குவது என்பது சாத்தியமே இல்லை தான். என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை அவருக்கு மட்டும்தான தெரியும்....!