வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் தொடங்கியது, இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


உள் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடி மழைக்கு  வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், சீவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும். சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.