உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தமிழக விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (மே 3) காவிரி நதிநீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததை அடுத்த. நேற்று மத்திய அரசு காவிரி விவகாரம் குறித்து பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மனுதாக்கல் செய்ததது. இந்த மனுவினை நேற்ற உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.


இதனையடுத்து காவிரி மேலான்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு திட்டத்தினை அமைப்பது குறித்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 



விசாரணையின் போது மத்திய அரசு தெரிவித்ததாவது... கர்நாட்டகா தேர்தலுக்கு பிறகு வரைவு திட்டத்தினை தாக்கல் செய்வதாக குறிப்பிட்டது. இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4-TMC தண்ணீர் வழங்கவேண்டும் என கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவினை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


மேலும் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது எனவும், அடுத்தகட்ட விசாரணை வரும் மே 8-ஆம் நாள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.


இந்த தீப்பின் பின்னர், தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக தெரிவித்து தமிழ விவசாயிகள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் செய்து வருகின்றனர். அதேவேலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தமிழக விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!