ரத யாத்திரையால் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது என்று இமயமலை ஆன்மீகப் பயணத்திற்குப் பின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். 


இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.


இந்நிலையில், ஆன்மீக பயணமாக பத்து நாட்கள் இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். 



அப்போது போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:


மன நிம்மதி வேண்டி நான் இமயமலை சுற்றுப்பயணம் சென்றேன் தற்பொழுது மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன்.


ரத யாத்திரை மூலம் மதக் கலவரத்தை தூண்ட அனுமதிக்க கூடாது. ரத யாத்திரையின் போது மதக்கலவரம் உருவாகாமல் தடுக்க வேண்டும்.


மதகலவரம் எந்த வடிவில் வநவ்தாலும் அதை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம் ஆகும். 


புதுக்கோட்டையில் ஆலங்குடி பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் காட்டுமிராண்டித்தனம் என்றார்.