10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்.13 ஆம் தேதி நிறைவு பெரும்; மே மாதம் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியீடபடும் என தெரிவிக்கபட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி நிறைவு பெறுகிறது; மே 24 ஆம் தேதி தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேர் எழுதவுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 2019 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9.45 லட்சம் மாணவர்கள் எழுதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்.,13 ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்1 பொதுத்தேர்வு, மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிகிறது. இதன் முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியாகிறது. 8.16 மாணவர்கள் எழுதும் +2 பொதுத்தேர்வு, மார்ச் 2 முதல் மார்ச் 24 வரை நடக்கிறது. இதன் முடிவுகள் ஏப்.,24 ல் வெளியாகிறது" என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.