கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்கும் என்ற சொலவடை தமிழகத்தில் உண்டு. சிலருக்கு அதிர்ஷ்டம் என்பது அந்தமாதிரிதான். வெகு இயல்பாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் அந்த அதிர்ஷ்டம் அடித்துவிட்டால் அடுத்த நொடி வாழ்க்கையே மாறிவிடும். கன்னியாகுமரியில் வெகு சாதாரணமாக மருத்துவராக இருந்த ஒருவர், யதேச்சையாக வாங்கிய லாட்டரி சீட்டு அவரது வாழ்வையே மாற்றியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகையையொட்டி கேரளா அரசின் லாட்டரி சீட்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. அந்த லாட்டரி சீட்டின், முதல் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கபட்டிருந்தது. இந்த 10 கோடி பரிசுத்தொகைக்காக 43 லட்சத்து 69 ஆயிரம் லாட்டரி சீட்டு அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 22ம் தேதி லாட்டரி சீட்டு குலுக்கப்பட்டது. அதில், முதல் பரிசான 10 கோடி ரூபாய் எச்பி 727990 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் யாரும் வந்து பணத்தை வாங்கவில்லை. பரிசுக்குரிய நபர் யாரென கண்டுபிடிக்கவும் முடியவில்லை. 


மேலும் படிக்க | நூல் புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம் - வீடியோ வெளியிட்டதும் தற்கொலை..!


இதனால் கேரளாவில் ஒட்டுமொத்த மக்களும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என தேடி வந்தனர். இதையடுத்து லாட்டரித் துறை விசாரணையில் செய்ததில், திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சில்லறை விற்பனை செய்யும் வல்லக்கடவு ரங்கன் என்பவர் கடையில்தான் இந்த லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் வாங்கிச்சென்றது யார் எனத் தெரியவில்லை. ஒருவேளை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் வாங்கிசென்றுவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கத் தொடங்கினர். 


விஷூ பம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கான மொத்த பரிசுத்தொகை ரூபாய் 34 கோடி ஆகும். முதல் பரிசு ரூபாய் 10 கோடி ஆகும். இரண்டாவதுப பரிசு ரூபாய் 50 லட்சம். மூன்றாவது பரிசு 12 நபர்களுக்கு ரூபாய் 60 லட்சம் என அறிவிக்கப்பட்டது. 10 கோடி ரூபாய் முதல் பரிசுக்கான இந்த லாட்டரி விற்பனை மட்டும் 250 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டிருந்தாலும், கேரளாவில் அரசின் கீழ் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், 10 கோடி ரூபாயை வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று ஒருகட்டத்தில் கேரள அரசும் தேடியது. 


லாட்டரி வாங்கப்பட்ட கதை


கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் என்பவரும், அவரது உறவினரான ரமேஷ் என்பவரும் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். அங்குள்ள விமான நிலையத்தில் உறவினர் ஒருவரை பிக்-அப் செய்வதற்கு சென்ற அவர்கள், யதேச்சையாக ‘அந்த’ லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர். வாங்கியதோடு மறந்தும்விட்டார்கள். 


அதன் பிறகுதான், லாட்டரி சீட்டில் பரிசு விழுந்த கதையே அவர்களுக்குத் தெரியவருகிறது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில் டாக்டர் பிரதீப் குமாரும், ரமேஷும் நடந்த விவரத்தை எடுத்துக்கூறினர். விரைவில் அவர்களுக்குரிய பரிசுத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பரிசு விழுந்த டாக்டர் பிரதீப் குமார் கூறியதாவது, ‘குலுக்கல் நடைபெற்று மூன்று நாட்களுக்கு பின்னரே எங்களுக்கு கிடைத்த எண்ணில்தான் முதல் பரிசு விழுந்துள்ளது என தெரிய வந்தது. 


மேலும் படிக்க | முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!


அதன் பின்னர் எங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழா மற்றும் உறவினர் ஒருவரின் மரணம் என பல வேலைகளுக்கு பின்பு கேரள  அரசு லாட்டரி அலுவலகத்தில் சென்று லாட்டரி சீட்டை சமர்ப்பித்துள்ளோம். இந்த பரிசை வழங்கியதற்காக இறைவனுக்கு நன்றி’ என்று தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR