வரும் ஜூன் 15 முதல் பின்னலாடை பொருட்களுக்கான விலையில் 10% மாற்றும் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னலாடை பொருட்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு பெற்றுள்ளதால், பின்னலாடைகளின் விலையில் சுமார் 10% வரையில் உயர்வு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது வரும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் இந்த திருப்பூர் நகரமானது வேலை தேடி செல்லும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக உள்ளது.


இந்நிலையில், மத்திய அரசின் GST வரியால் பின்னலாடை உற்பத்திக்கான மூலப்பொருட்கள், பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் முன்னதாக நிர்ணயிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் விலைகள் கட்டுப்படியாகவில்லை என பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


எனவே மூலப்பொருள் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பின்னலாடை விலையில் 10% உயர்த்தப்படுவதாக பின்னலாடை உற்பத்தி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்!