தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த திறப்புவிழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (President Ramnath Kovind) தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுப்பார். பின்னர் மாலை சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு வருகை தர உள்ளார்.


ALSO READ | கலைஞர் நினைவு நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது: PMK


இதன் காரணமாக சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர டிரோன் கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்பு பணிகளை போலீசார் ஆய்வு செய்கிறார்கள்.



முன்னதாக குடியரசுத் தலைவர் பயன்படுத்தக்கூடிய குண்டுதுளைக்காத காரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப் பேரவை நிகழ்ச்சிக்கு குடியரசு தலைவர் வருகை புரிய உள்ளதால் சென்னை முழுவதும் உயர் எச்சரிக்கை நிலைப்படுத்தப்பட்டுள்ளது.


ALSO READ | கடைகள், வழிபாட்டு தலங்களை மூடும் அரசின் முடிவு வரவேற்கதக்கது: OPS


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR