ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 M.L.A-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக துணை முதலவர் OPS உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் இந்த மனுக்களின் மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.


இதியடுத்து, இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.