12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 12 புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் கல்விக் குழுமத்தின் 14வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அல்லது அதேபோல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் உடனடி வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் திறன்வளர்ப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டு நிகழாண்டு முதல் திறன்வளர்ப்பு பயிற்சிக்கான 12 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்காக  அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


தமிழக அரசு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டில் ₹28,759 கோடி நிதி பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவும். மேலும் வருகிற கல்வியாண்டில் LKG, UKG வகுப்பில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களைச் சேர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.