தேனி மாவட்டம் கம்பம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு முட்டை,கோழி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி இவ்வழியாகவே நடைபெறுகிறது. அதில், பொருட்களோடு சேர்ந்து ரேசன் அரிசி,கோதுமை,கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்தப்படுகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களாகப் பலத்த சோதனையைத் தாண்டியும் போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவி கஞ்சா கடத்தலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்குக் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கம்பம் பகுதி முழுக்க போலீசாரின் பாதுகாப்பு வலைக்குள் கொண்டுவரப்பட்டது. மணிக்கட்டி ஆலமரம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும்படி 5 சாக்கு மூட்டைகளுடன் டூவிலரில் நின்றிருந்த ஐந்து பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்ததில் அதில் 123 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த கம்பம் வடக்கு போலீசார் 123 கிலோ கஞ்சா மூட்டையையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டூவிலரையும் பறிமுதல் செய்தனர். 



மேலும் படிக்க | தருமபுரியில் குடிசை வீட்டில் பெட்டி பெட்டியாக போதை ஊசிகளை கைப்பற்றிய போலீஸார்!


மேலும், கடத்தலில் ஈடுபட்ட அன்பு, சஞ்சய்குமார் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழக ஏஜெண்டுகளுக்கு கைமாற்றுவதும், அதைக் கேரளாவிற்கு கடத்தி லட்சக் கணக்கில் பணம் பார்ப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கஞ்சா கடத்தல் கும்பல் போலீசாரிடம் பிடிபட்ட சம்பவத்தால் தமிழக-கேரள எல்லையில் பதட்டம் நிலவுகிறது. 


மேலும் படிக்க | ஆபாசமாக வீடியோ எடுத்து தமிழ் நடிகை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR