அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு மயக்கம்
சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் அரசு அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு அங்கன்வாடி பள்ளியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி பள்ளியில் பள்ளி ஊழியராக (ஆசிரியையாக) அஞ்சலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
பொதுவாக அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். தமிழ்நாட்டில் இம்மையங்கள் பால்வாடி என்ற பெயரில் அறியப்படுகின்றன. தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, அரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல், குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
ALSO READ: Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் (Ambur) அடுத்த சோமலாபுரம் அரசு அங்கன்வாடியில் மல்லிகா என்பவர் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். இன்று குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியபோது அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் மயக்கமடைந்தனர். இத்னால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். தற்போது மயக்கம் அடைந்த 13 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி. சுப்பிரமணி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மயக்கமடைந்த குழந்தைகள் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிகளவில் கூடியதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
ALSO READ: T23 புலிக்கு உடல்நலக் குறைவு; தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR