தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்- விவரம் உள்ளே!!
14 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
1.மின்வாரிய கண்காணிப்பு டிஜிபியாக பதவி வகிக்கும் கே.பி.மகேந்திரன் தீயணைப்புத்துறை டிஜிபியாக இடமாற்றம்
2.ரயில்வே கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் லட்சுமி பிரசாத் சிங் மின்வாரிய கூடுதல் டிஜிபியாக இடமாற்றம்
3. சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் சைலேந்திரபாபு ரயில்வே கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் .
4. அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் அஷுதோஷ் சுக்லா சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் .
5. சென்னை போலீஸ் போக்குவரத்து கழக ஏடிஜிபி மற்றும் சிறப்பு அதிகாரியாக பதவி வகிக்கும் ராஜேஷ் தாஸ் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம்
6. குற்றப்பிரிவு கூடுதல் ஏடிஜிபியாக பதவி வகிக்கும் சுனில்குமார் சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக தேர்வு
7. சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக பதவி வகிக்கும் கரன்சின்ஹா போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஏடிஜிபியாக இடமாற்றம்
8. போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் அம்ரேஷ் புஜாரி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம்
9. டெக்னிக்கல் பிரிவு ஐஜியாக பதவி வகிக்கும் செந்தாமரைக்கண்ணன் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மற்றும் உறுப்பினர் செயலராக இடமாற்றம்
10. சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மற்றும் உறுப்பினர் செயலராக பதவி வகிக்கும் கல்பனா நாயக் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு (நிதி நிறுவனங்கள்) ஐஜியாக இடமாற்றம்
11. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகிக்கும் அஷோக் குமார் தாஸ் டெக்னிக்கல் பிரிவு ஐஜியாக இடமாற்றம்
12. சேலம் மாநகர ஆணையராக பதவி வகிக்கும் சஞ்ஜய் குமார் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக இடமாற்றம்
13. அமலாக்கப்பிரிவு ஐஜியாக பதவி வகிக்கும் சங்கர் சேலம் மாநகர காவல் ஆணையராக இடமாற்றம்
14. திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக பதவி வகிக்கும் தீபக்.எம்.டேமர் சென்னை ரயில்வே டிஐஜியாக இடமாற்றம்
இந்த உத்தரவை உள்துறை செயலர் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.