பெரியார் பல்கலைக்கழகத்தில் மார்ச் 20ல் 17வது பட்டமளிப்பு விழா!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா மார்ச் 20ம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற, 82 கல்லூரிகளில் மொத்தம், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இம்மாணவர்கள் நடப்பாண்டில் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த ஜனவரி 1-ம் தேதி வெளியானது.
இதையடுத்து, தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்த துணைவேந்தர் குழந்தைவேல் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் என தனியார் தொலைக்காட்சிக்கு தகவல் அளித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.