டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக்கொண்டதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதற்க்கு யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.


இதன் மூலம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர் மேலும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு இருந்தார்.


இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதிநீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 



 


சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.