18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு அக்.,9 ஒத்திவைப்பு
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இன்று இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளதால், சபாநாயகர் தனபால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுக்களில் சட்டத்திற்கு உட்பட்டே 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உத்தரவு வரும் வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது. இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உத்தரவும் தொடரும் எனவும் உத்தரவிட்டார்.