விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார். மக்காச்சோள விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகவும். இதற்காக ரூ. 186.25 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 


எனவே, சட்ட விதி 110-யின் கீழ், மக்காச்சோள பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேராத விவசாயிகள்  விரைவில் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு  மக்காச் சோளம் பயிரிடுபவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 


தமிழத்தில் மக்காச்சோளம் முக்கியமான பயிராக உள்ளது. குறைவான தண்ணீர் பயன்பாட்டில் விளையும் என்பதால் விவசாயிகள் தற்போது இதனை அதிக அளவில் பயிரிடுகின்றனர். அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் சாகுபடி வெகுவாக பாதித்தது. இந்தப் பாதிப்பால் மக்காச்சோளம் பயிரிட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 


இந்நிலையில், மக்காச்சோளம் பயிரிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு ரூ.186.25 கோடி நிவாரணத்தை, விதிஎண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பயிர் காப்பீடுத் திட்டத்தில் சேராத விவசாயிகள் விரைவில் சேர வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.