#18MLA-கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதி நியமனம்!!
அதிமுக கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்!
அதிமுக கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்ற 18 அதிமுக எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தனர். பின்னர், கடந்த ஜூன் 14 ஆம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதாக ர்தேரிவித்திருன்தனர். இதை தொடர்ந்து, ஜூன் 14 ஆம் விசாரணை செய்ததில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இவ்வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் தெரிவிப்பார் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 3-வது நீதிபதியாக தற்போது, நீதிபதி விமலா நியமிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!