தியாகிகள் தினம்: தமிழகத்தில் 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!
இன்று தியாகிகள் தினத்தை ஒட்டி சென்னையில் இன்று காலை 11 மணிக்கு 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்று தியாகிகள் தினத்தை ஒட்டி சென்னையில் இன்று காலை 11 மணிக்கு 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று சென்னையில் காலை 11:00 மணிக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் 2 நிமிடங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.