தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் இன்று ரத்த தானம்!
தமிழகம் முழுவதும் காவலர்களின் ரத்த தான முகாமில் 20,000 காவலர்கள் பங்கேற்பு.
தமிழகம் முழுவதும் காவலர்களின் ரத்த தான முகாம்: 20,000 காவலர்கள் பங்கேற்பு.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் இன்று ரத்த தானம் செய்கின்றனர். இதில் ஒவ்வொரு போலீசாரிடம் இருந்தும் 1 யூனிட் வீதம் மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் அனைத்தும் பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.
தற்போது இந்த ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. காவலர்களின் ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகாது என்று சுகாதர துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் காவல்துறையினரின் ரத்த தான முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 20,000 போலீசார் இந்த முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்து வருகின்றனர். சென்னையில் 3000 போலீசார் செய்து வருகின்றனர்.