இந்தியாவில் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு லட்சகணக்கான மாணவர்கள் டிகிரி படித்துவிட்டு, அரசுப் பணிக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் போலவே, முதல் தலைமுறை அரசுப் பணிக்காக தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் அஞ்சல்துறை, குடிமைப் பணிகள், எஸ்எஸ்சி மற்றும் வங்கிக் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கும் விடா முயற்சியுடன் இரவு பகலாக படிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக செய்த மாணவர் - குவியும் பாராட்டு


இந்தமுறையாவது தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடமாட்டோமா? என்ற ஆசையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணிகளுக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அவர்களின் ஒரே இலக்கு அரசுப் பணியை பெற வேண்டும் என்பது தான். அத்தகைய இலக்கோடு பயணிப்பவர்களுக்கு தேர்வுகள் கூட கஷ்டமாக இருப்பதில்லை. அவர்கள் எழுதிய தேர்வில் நடக்கும் மோசடி தான் பெரும்பாலானவர்களை மனச்சோர்வுக்குள் தள்ளிவிடுகிறது. 


ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பை இழப்பவர்கள் இங்கு ஏராளம். ஏற்கனவே ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், வட மாநிலத்தவர்கள் 200 பேர் மோசடியாக போலி சான்றிதழ் கொடுத்து தமிழகத்தில் உள்ள அரசுப் பணியில் சேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமுன்பும் அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் எழுதத் தெரியாதவர்கள் கூட தேர்ச்சி பெற்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்தது. 


இப்போது 200 பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து அஞ்சல் துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட தமிழகத்தில் இருக்கும் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இத்தகைய மோசடிகள் 200 பேரின் அரசுப் பணி கனவை சிதைத்துள்ளது என்றுகூட சொல்லலாம். இதேபோல் இன்னும் எத்தனைபேர் மோசடியாக அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனரோ? தெரியவில்லை. இதேபோல் டிஎன்பிஎஸ்சியிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தபோதும், அவர்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கை என்ன? என்ற தகவலும் இல்லை. 


மேலும் மீண்டும் மதமாற்ற சர்ச்சை: இந்து கடவுள்களை அவமதித்தாரா ஆசிரியை? மாணவியின் பகீர் குற்றச்சாட்டு!


தமிழக அரசு இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் இதேபோல் மோசடியாக சான்றிதழ் கொடுத்து எத்தனைபேர் சேர்ந்துள்ளனர்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மேலும், இத்தகைய மோசடிகள் நடைபெறாவண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அது டிஎன்பிஎஸ்சியாக இருந்தாலும், மற்ற மத்திய அரசுப் பணிகளாக இருந்தாலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தமிழக மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு சார்ந்த பணிகளில் தமிழர்களுக்கு அதிகம் ஒதுக்கப்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR