7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்றும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 38 தொகுதி உட்பட மொத்தம் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. 


2ஜி விவகாரம் மூலம் மிகவும் புகழ் பெற்ற முன்னால் அமைச்சர் ஆ.ராசா திமுக சார்பில் நீலகிரி(தனி) தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் அவருக்கு எதிராக அதிமுக சார்பில் தியாகராஜன் களம் கண்டார். 


நீலகிரி மக்களவை தொகுதியில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.