சென்னை: நாளை உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாடப்பட உள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கவும், புதிய ஆண்டை வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகிறார்கள். புது வருட கொண்டாடத்தின் போது விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, 


ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்து உயிர்களைக் காக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நள்ளிரவு நேரத்தில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது