அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதில் 22 பேர் டி.டி.வி. தினகரனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தினகரன் எதிர்கால அரசியல் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதனால் அதிமுகவுக்குள் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது என தெரிகிறது.


மேலும் பல எம்.எல்..ஏக்கள் டி.டி.வி.தினகரனை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சபாநாயகர் தனபாலை அவசரமாக சந்தித்து பேசினார். இன்று மாலை முதல்வர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். 


சட்டபேரவையில் 118 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தான் பெரும்பான்மை பலம் உள்ளதாக கருதப்படும்.  டி.டி.வி.தினகரனுக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், சட்ட பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.