2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
இரண்டாவது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் வங்கி பரிவர்த்தனைகள் உட்பட ஆவணங்களோடு ஆஜரான சலிம் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு பின் டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர் இந்த வழக்கில் ஜாபர் சாதியின் கூட்டாளிகள் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 2000 கோடி ரூபாய்க்கு மேல் போதை பால் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு ஒன்று பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இது தொடர்பாக ஜாபர் சாதிக் வீடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடு அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் படிக்க | மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு!
மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜாபர் சாதிக் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் முறைகேடாக ஈட்டிய வருமானத்தை யாருக்கு எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் மூன்று நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி அவர் அளித்துள்ள வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் நேற்று முந்தினம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனாவிடம் சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தினை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக்கு உடன் தொடர்பில் இருந்து அனைவருக்கும் சம்மன் அனுப்பி அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் நேற்று காலை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஜாபர் சாதிக்கும் சகோதரர் சலீம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அவரிடம் சொத்துக்கள் வங்கி பரிவர்த்தனைகள் அவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாக்குமூலத்தினை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். அவரிடம் ஜாபர் சாதிக் மேற்கொள்ளும் அனைத்து தொழில்கள் பற்றியும், அது தொடர்பான ஆவணங்களை பெற்று விசாரணை தீவிரபடுத்தி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ