முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நிறைவுபெற்றுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாநாட்டின்  நிறைவில் 80க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் குறிபிட்டுள்ளதாவது'- 


அதிகாரிகள் எப்போது பொதுமக்களுக்கான சேவகர்களாய் இருக்க வேண்டும். மக்களுக்கு எப்போது பிரச்சணைகள் ஏற்பட்டாளும் உடனடியாக அதை சரிசெய்யும் அளவிற்கு அதிகாரிகள் தயாராக இருத்தல் வேண்டும்"


பொதுமக்களின் புகார்களை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் இல்லாத காவல் நிலையங்களில் விரைவில் அவை பொருத்தப்படும் என்றார்.


மக்களின் நலன் குறித்து எந்நேரமும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் எனவும், அவர்களுடைய நலனுக்காக பாடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் காவலர்கள் குடியிருப்பு கட்டித்தரப்படும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. 


> இளைஞர்களிடையே தலைஎடுத்துள்ள ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்தும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். 


> கந்துவட்டி புகார்களில் துரித நடவடிக்கை தேவை. 


> லாட்டரி, சூதாட்டம், குட்கா விற்பனை போன்ற குற்றங்கள் இருந்தால் சமந்தப்பட்ட காவலரே பொறுப்பு. 


> மதுரை மீனாட்சியம்மன் கொவ்சிளில் ஏற்படும் தீ விபத்தினை போல் வேறு எங்கும் நிகழக்கூடாது. 


> சேமிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் மற்றது சிறிய சந்தேகம் எழுந்தாலும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 


> மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்கானிப்பளர்கள் இருதுருவங்கள் போல் அல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 


> தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் முன் முன் அதற்க்கு தீர்வு காண வேண்டும்.


> பயங்கரவாதம், மதவாதம், இடதுசாரி தீவிரவாதம் சமுதாயத்ததின் மிகப்பெரிய அட்சுருத்தல்களை கண்காணிக்க வேண்டும்.


> வழிப்பறி, நகைப்பறிப்பு ஆகியவற்றை வளர விடாமல் தடுக்க வேண்டும். 


> சாதி மோதல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்டவை அதில் அடங்கும்.