நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க 3 நாள் சிறப்பு விழா...
தமிழ்நாட்டு பாரம்பரியமும் , கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் வாணியம்பாடியில் வேர்கள் அறக்கட்டளை சார்பில் 3 நாட்களாக நடைபெற்ற தமிழர் பண்பாட்டு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்!
தமிழ்நாட்டு பாரம்பரியமும் , கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில் வாணியம்பாடியில் வேர்கள் அறக்கட்டளை சார்பில் 3 நாட்களாக நடைபெற்ற தமிழர் பண்பாட்டு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டுப்புறகலைகளையும், கலைஞ்சர்களையும் பாதுகாக்கவும், ஆண்டிற்கு மூன்று கலைவிழாக்கள் நடத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவன் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொங்கல் பண்டிகையினையொட்டி வேர்கள் அறக்கட்டளை சார்பில் மூன்று நாட்கள் தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழர் பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது. இந்த தமிழர் பண்பாட்டு திருவிழாவானது வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவின் முதல் நாள் அனைத்து கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் நகர்வலமும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி மங்கல இசையுடன் கரகாட்டமும், பம்பை, கைச்சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, காவடியாட்டம், மாடாட்டம், மயிலாட்டமும் சக்கை, சாட்டை குச்சி ஆட்டம், ஒயிலாட்டம், தோல்பறை, பெரிய குச்சி ஆட்டம் ஆகிய நிகழ்வுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அடுத்த இரண்டு தினம் கிராமியபாடல்கள், பல்சுவை நிகழ்வு, வாணியம்பாடி இளைஞர்களின் சிலம்ப விளையாட்டு, பல நிகழ்வுகள்,மற்றும் இளவட்டகல் தூக்கும் போட்டி, வழுக்குமரம் ஏறும் போட்டி, பானை போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவிக்கையில்., நமது மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் அதிகளவில் உள்ளனர் எனவே கலைஞ்சர்களையும் பாதுகாக்க நாம் நமது நாட்டுப்புற கலைகளையும் பாதுகாக்கவேண்டும். கலைஞர்களில் வயதுடைய முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், நமது மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று கலைவிழாக்கள் நடத்த அரசிடம் நிதி மற்றும் அனுமதி வழங்கவும், கலைபண்பாட்டு துறை இணை இயக்குனர் சூர்யா பிரகாஷ் அவர்களிடம் பேசி கடிதம் தயார் செய்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கோலாகலமாக நடைப்பெற்ற இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.