சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 54 நீதிபதிகள் உள்ளனர். 24 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 57-லாக அதிகரித்துள்ளது.


மூன்று நீதிபதிகளின் பெயர்கள் வருமாறு என். சதீஷ்குமார், என்.சே‌ஷ சாயி, ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் ஆகும். இவர்கள் மூன்று பேரும் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்தனர். இவர்களை சென்னை ஐகோர்ட் -டுக்கு புதிய நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று இந்த மூன்று பேரும் ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றனர். புதிய நீதிபதிகள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


இதை தொடர்ந்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் உயர் நீமன்ற வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினார்கள். அதற்கு புதிய நீதிபதிகள் 3 பேரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.