கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 தொழிலாளர்கள்; 2 பேர் பலி
சேலம் அருகே கழிவுநீர் தொட்டியில் 3 தொழிலாளர்கள் தவறி விழுந்தனர் சம்பம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே கட்டுமான பணி நடைபெற்ற வீட்டின் கழிவுநீர் தொட்டியில் மூன்று தொழிலாளர்கள் தவறி விழுந்தனர். தவறி விழுந்த மூன்று தொழிலாளர்களில் இருவர் அங்கேயே இறந்து விட்டனர். அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெட்டியூரில் நடந்த இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.