Tamilnadu News: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இந்த பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த இடம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கும், தனிநபருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்விடத்தில் பள்ளி செல்ல பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் நேற்று (ஜூலை 27) காலை சாக்கோட்டையில் சாலைமறியல் நடைபெற்றது. மறியலினால் அப்பகுதியில்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட பாஜகவினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் நேற்றிரவு பாஜக மாவட்ட தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் பசுபதி பாண்டியன், இந்து மக்கள் கட்சி கட்சியை சேர்ந்த குருமூர்த்தி உள்ளிட்ட 8 நபர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து போராட்டம்: திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைது


நீதிபதி தனது வீட்டிற்கு அழைத்து வர கூறியதை தொடர்ந்து பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட எட்டு நபர்களும் நீதிபதி இல்லத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 8 நபர்களையும் எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கிளை சிறைக்கு காவல்துறையினர் 8 நபர்களையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இதனிடையே, காவல்துறையினரை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக பிரமுகர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து இன்று (ஜூலை 28) மதியம் கருப்பு முருகானந்தம் தலைமையில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோத பண மோசடி தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இது அவரது கைது சட்ட விரோதமானது எனவும் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். மறுமுனையில், பாஜகவினர் சிலரும் அடுத்தடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 


பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கி மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், பெரியார், விஜய் உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து அவதூறாக ட்வீட் செய்து வந்ததாக கோவையில் பாஜக ஆதாரவளரான உமா கார்கி என்ற பெண்ணும் போலீசாரால் கைது செய்யப்ட்டனர். இது செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை பழிவாங்கும் போக்கு என பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி: ஆர்.கே சுரேஷ் ரூ.15 கோடி பணம் பெற்றது அம்பலம்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ