மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27,000 கனஅடியில் இருந்து 33,0000 கனஅடியாக அதிகரிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து தொடர்ந்து உயர்ந்தது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.


இந்தநிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியில் இருந்து 30 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்படுகிறது. தற்போது நீர் மட்டம் 114.05 அடியாக உள்ளது. அணை முழுகொள்ளளவு எட்ட உள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணையின் நீர் இருப்பை கண்காணித்து நீரை வெளியேற்ற வேண்டும் என ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது.