தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 2,236 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்வு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது,  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,509 பேரில் சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், சென்னையில் மொத்தம் சுமார் 47,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 




சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 191 பேருக்கும், மதுரையில் 203 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும், தேனியில் 68 பேருக்கும், திருச்சியில் 27 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,543 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று வரையில் தமிழகத்தில் 10,08,974 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


READ | இனி ஃபேர் & லவ்லியில் 'ஃபேர்' கிடையாது... பெயரை மாற்றிய HUL..!


இன்று அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.