தமிழகத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு 22 ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. அதிமுக திமுக, அமமுக. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர் நிறுத்தியுள்ளன.


ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. மே 19 ஆம் தேதி இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுடன் இந்த நான்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இதனிடையே பாப்பிரெட்டிபட்டி, பூந்தமல்லி. கடலூர் உள்ளிட்ட 10 இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அந்தத் தொகுதிகளுக்கு உள்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆதிதிராவிடர் வேட்பாளர் என்றால் ரூ.5 ஆயிரமும் கட்டி மனு அளிக்க வேண்டும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற மே 2 ஆம் தேதி கடைசி நாளாகும். மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.