தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது!!
சென்னையில் 1,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது...!
சென்னையில் 1,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக அதிகரித்துள்ளது...!
தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1966 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,210 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 34 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,244 பேரில் சென்னையில் மட்டும் 1,168 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 105 ஆய்வகங்கள் (அரசு - 53 மற்றும் தனியார் - 52) உள்ளன. அதில், இன்று மட்டும் 42,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 16,09,448 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில், 2,543 பேர் ஆண்கள், 1,700 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 84,535 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 53,912 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89,532 ஆக உள்ளது.
தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,966 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 6,843 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,14,757 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16 ஆயிரத்து 870 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
READ | மதுரையில் முழுஊரடங்கு மேலும் 2 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு..!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....
சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,168 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும், மதுரையில் 319 பேருக்கும், விருதுநகரில் 246 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், திருவள்ளூரில் 232 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று, சென்னையில் 32 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் 4 பேரும், காஞ்சிபுரம், தூத்துக்குடியில் தலா 3 பேரும், ராமநாதபுரம், தேனியில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சியில் தலா ஒருவரும் என 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.