தமிழகத்திலிருந்து ஓகி புயலின் பொது கடலுக்குள் மீன் பிடிக்க சென்றிருந்த மீனவர்களை கடற் படையினர் தொடர்ந்து தேடி கொண்டிருகின்றனர். இதையடுத்து, ஓகி புயலில் சிக்கிக் கொண்ட 433 மீனவர்களை இன்னும் காணவில்லை என இன்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உள்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்திலிருந்து காணாமல் போன மீனவர்கள் குறித்த இறுதிப் பட்டியலை தமிழக அரசு இதுவரை தரவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதேபோல் கேரளாவைச் சேர்ந்த 186 மீனவர்களையும் காணவில்லை என்றும், அந்த மாநிலத்தை சேர்ந்த 63 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓகி புயலில் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேர் உட்பட 700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.