சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, தமிழகத்தில் ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பார் டெண்டரில் 1778 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றுள்ளனர். டெண்டர் அறிவிப்பு வெளிப்படையாக உள்ளது. அனைவருக்கும் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த இடத்திலும் புகார்கள் இல்லை. டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி தவறான முறையில் கருத்தை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக புகார்கள் வெளியிடப்படும். தவறுகள் நடைபெற்றால் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுபான கடைகள் குறித்து இந்தியா முழுவதும் கொள்கை முடிவெடுத்தால் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். 


தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 273.92 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதாவது சுதந்திர தினத்தன்று விடுமுறை காரணமாக அதற்கு முந்தைய தினம் 14/07/22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று  டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலரும் மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். அதன் காரணமாக சென்னை மண்டலத்தில்- 55.77 கோடி. திருச்சி மண்டலத்தில்- 53 கோடி, சேலம் மண்டலத்தில் - 54.12 கோடி, மதுரை மண்டலத்தில்- 58.26 கோடி மற்றும் கோவை மண்டலத்தில்- 52.29 கோடி என மொத்தமாக 273.29 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 


மேலும் படிக்க: காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கில் கொடுத்தால் பணம்?


இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்க போவதாக, ஆகஸ்ட் 11ம் தேதி உறுதிமொழி எடுத்தார். தமிழக அரசுக்கு சொந்தமான, டாஸ்மாக் நிறுவனம், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட்14 ஆம் தேதி, ஒரே நாளில், 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக கடந்த வாரம் திங்கள்கிழமை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி, ஏழை மக்களை பாதிக்கும் என்பதால், உத்தேச மின்சார (திருத்த) மசோதா 2022ஐ இயற்ற மாநில அரசு அனுமதிக்காது என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு திமுக எம்பி டிஆர் பாலு மற்றும் பிற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால்தான் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: டாஸ்மாக் கடை வைத்தால் அடித்து நொறுக்குவோம் குமுறும் கோயமுத்தூர் பெண்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ