கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 வயது பெண்மணி ஒருவர் பலியானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட பின்னர் நேற்று அவர் வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார் எனவும், சிகிச்சை பலன் இன்றி இறந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மாநிலத்தின் இறப்பு மொத்தம் 11-ஆக அதிகரித்துள்ளது.


இதுதொடர்பாக மக்கள் நலம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த 45-வயது பெண், 05.04.2020 அன்று காலை 11 மணியளவில் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட., 11.04.2020 அன்று இரவு 7.30 மணியளவில் மூச்சு தின்றல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழகத்தில் நேற்று புதிதாக 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு தகவல்கள் படி தமிழகத்தில் அதிகப்படியாக சென்னையில் 180 வழக்குகள் பதிவாகியுள்ளது, இரண்டாவதாக கோவையில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 47 பேர் இதுவரை நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சனியன்று, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு பெண்மணி இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.