தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180-லிருந்து 283 ஆக உயர்வு... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 


இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது.... தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றுடையவர்களின்  எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் இன்று மட்டும் 82 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 283-ல் இருந்து 365 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 35,036 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.  


ஏற்கனவே, கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. ஒரே நாளில் 5,360 மாதிரிகள் பரிசோதனை செய்யும் அளவுக்கு வசதிகள் உள்ளன. PCR பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை செய்தால் மட்டுமே கொரோனா தொற்றை உறுதி செய்ய முடியும். லேசான சளி, இருமல் இருந்தால் கூட பரிசோதனை செய்கிறோம்” என்றார்.


District
Confirmed
 
Chennai

7240

Coimbatore

1128

Tiruppur

28108

Erode 70
Dindigul

369

Tirunelveli

262

Namakkal 50
Thiruvallur 47
Chengalpattu 47
Tiruchirappalli 46
Theni 44
Madurai 44
Karur 41
Nagapattinam 40
Ranipet 38
Thanjavur

135

Viluppuram 30
Thoothukkudi 26
Salem 24
Vellore 23
Thiruvarur 22
Cuddalore 20
Virudhunagar 17
Tirupathur 17
Kanniyakumari 16
Tenkasi

415

Sivaganga 11
Ramanathapuram 10
The Nilgiris 9
Tiruvannamalai 8
Kancheepuram 7
Perambalur

34

Kallakurichi 3
Ariyalur 1

தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின் இயக்குநர் உமாநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்... “ 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் கிட்களை வாங்கியுள்ளோம்” என்றார்.