பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 30-ம் தேதியிலிருந்து லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னிந்திய மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் இன்று 4-வது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டு வருகின்றனர்


லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தால் சரக்குகள் தேக்கம் அடைந்து, அத்தியாவாசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.


இந்நிலையில் இன்று முதல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.