வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், இன்று (28.11.2021), கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர்!


இதேபோல், நாளை (29.11.2021), கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.



30 மற்றும் 1, 2 ஆம் தேதிகளில் கன்னியாக்குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய தென் மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன், மண்டபம், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக தலா 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நன்னிலத்தில் 10 சென்டி மீட்டரும், தங்கஞ்சிமடத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகரலாம் என கூறியுள்ளது.


ALSO READ வட கடலோர மாவட்டங்களுக்கான ’ரெட் அலர்ட்’ தொடரும்- வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR