எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 5 பேர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 5 பேரையும், அவர்களது படகுகளுடன் கைது செய்தனர். அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில், தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை நேற்று  இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இன்று மேலும் 5 பேரை கைது செய்துள்ளது.