பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான ஒரு திட்டமாகும். புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு பொதுப்போக்குவரத்துத் திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாள் என்பதால் கட்டண சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் ஜனவரி 17ஆம் தேதி அன்று காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையிலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணிகளுக்கு கேப் (CAB) இயக்கப்படும். 


அரசினர் தோட்டம், டிஎம்எஸ் ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும் எனவும், காணும் பொங்கல் அன்று மெரினாவுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் கேப் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்