சென்னை பூந்தமல்லி அருகே பழமை வாய்ந்த  நாக ஆபரணங்களுடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கடத்தப்பட உள்ளதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பழங்கால சிலையை மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரனின் வழிகாட்டுதலுடன், சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன் காவல் உதவி ஆய்வாளர்கள் திருராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் பிரபாகரன், பாண்டிய ராஜ், திருகந்தி ஆகியோர்கள் அடங்கிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கே சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சிலையின் விலை ரூ.25 கோடி என போலீஸாரிடம் கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சை..! பலியான 21 வயது இளம் நடிகை..!


சிலையை வாங்குவது போல் நடித்த போலீஸார் அவர்கள் சிலையை காண்பித்தவுடன் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி சிலையை விற்க முயன்ற சென்னை வெள்ளவேடு, புதுகாலணியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா(46), புதுசத்திரம், கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ்(42) இருவரையும் கைது செய்ய போலீஸார் அவர்களிடம் இருந்து சிலையையும் பறிமுதல் செய்தனர். 



இதைத்தொடர்ந்து தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உதவி காவல் ஆய்வாளர் ராஜசேகர் ஒப்படைத்தார். இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு குற்ற எண்.13/2022 கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் புலண்விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் செல்வராஜ் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். 


இதனிடையே மீட்கப்பட்ட சிலையானது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது தெரியவந்துள்ளது. பச்சைக் கல் லிங்கத்தினை உலோகத்தாலான நாகாபரணம் உள்ளது. அதனை தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வார் சுமார் 29 செ.மீ உயரமும் 18 செ.மீ அகலமும் கொண்டுள்ளது.  இதேபோன்று சிலையின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ அளவும், 18 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. மேலும், இந்த சிலை நேபாள பாணியில் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | வட கொரியா: கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு காய்ச்சல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR