கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய்க்கு மத்தியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலை மற்றும் ஊதியம் இல்லாமல் ஈரானில் (Iran) சிக்கித் தவித்த 58 இந்திய மீனவர்கள் (Indian Fishermen) இன்று டெல்லிக்கு வந்தனர். சர்வதேச கடல்சார் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் பிரஷரின் (Sanjay Prashar) தாராள மனப்பான்மையால் அவர்கள் திரும்பி வருவது சாத்தியமானது. அவர் எஸ்ஓஎஸ் அழைப்பை (SOS call) பெற்றவுடனேயே சில நாட்களில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தி ஏற்பாடுகளை செய்ததாக திருவனந்தபுரம் எம்.பி. சஷி தரூர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களின் முகங்களில் மன மற்றும் உடல் சோர்வு தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் இப்போது இணைக்கும் விமானத்தில் ஏறி தங்கள் ஊர்களை அடைய வேண்டும் என இந்த மீனவர்களுக்கு உதவிய குழு கூறியது.  கேரளாவின் (Kerala) திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களும் தமிழ்நாட்டிலிருந்து 40 மீனவர்களும் திரும்பி வந்துள்ளனர்.


ஜூலை 14 ம் தேதி மீனவர்கள் தெஹ்ரான் விமான நிலையத்திற்கு ஒரு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் மஹான் ஏர்வேஸ் மூலம் தில்லிக்கு வந்தனர். இது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் வந்தே பாரத் மிஷனின் (Vande Bharat Mission) கீழ் விமானங்களை இயக்கி வருகிறது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், கேரளாவின் கடலோர கிராமமான விசின்ஜாம் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்கள் முதன்முறையாக தனியார் முதலாளிகளுக்காக மீன்பிடிக் கப்பல்களில் வேலை செய்வதற்காக ஈரானுக்குப் புறப்பட்டனர்.


“ஈரானுக்குச் செல்வதற்காக எனது முகவருக்கு நான் ரூ .50,000 செலுத்தியிருந்தேன். கேரளாவிலிருந்து நாங்கள் ஒவ்வொருவரும் அந்தத் தொகையை செலுத்தியிருந்தோம். இதற்காக எனது மனைவியின் தாலியை கூட அடமானம் வைத்தேன். நான் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருகிறேன். நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடேன்.  இப்போது நான் இந்த கடனை அடைக்க வேண்டும், "என்று 10-12 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிந்த 36 வயதான அருள்தாஸ் தெரிவித்தார்.


ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து சுமார் 600 இந்தியர்கள், பெரும்பாலும் மீனவர்கள் திரும்பி வருவதற்காக வெளியுறவு அமைச்சகத்துடன் (Ministry of External Affairs) நெருக்கமாக பணியாற்றிய காங்கிரஸின் திரு தரூர், இவர்களை மீண்டும் அழைத்து வருவது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றார்.


தமிழ்நாட்டைச் (Tamil Nadu) சேர்ந்த 40 மீனவர்கள் இரண்டு அறைகளில் வசித்து வந்தனர்; ஒவ்வொரு அறையிலும் தலா 20 பேர். அவர்கள் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு வேளை சிறிய அளவு உணவே உண்ண முடிந்தது. பல கடினங்களை எதிர்கொண்ட மீனவர்கள் கிட்டத்தட்ட நாடு திரும்பும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என திரு. கூறினார்.


ALSO READ: விரைவில் தாயகம் திரும்புவார்கள் தமிழக மீனவர்கள்: துரித கதியில் ஏற்பாடுகள்


திரு குமார் தான் திரு பிராஷருக்கு இந்த SOS அழைப்பை விடுத்தார். அதன் பிறகு ஐந்து நாட்களுக்குள், ஏற்பாடுகள் செய்யப்பட்டு டிக்கெட்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.


“கடலில் எங்கள் மீனவர் சகோதரர்களைப் பார்க்கும்போது, நான் எப்போதும் அவர்களின் தைரியத்தால் தாக்கப்படுவேன். இப்போது அவர்களுக்கு உதவ முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் இந்தியர்கள் "என்று திரு பிராஷர் தெரிவித்தார்.