கொரோனாவின் மூன்று அலைகள் ஓய்ந்ததால் மக்கள் சற்று சுதந்திரமாக வெளியில் நடமாட ஆரம்பித்தனர்.  இந்தச் சூழலில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சமீபத்தில்கூட, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



அதன்படி, தமிழகத்தில் இன்று 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,59,586ஆக உள்ளது.  சென்னையில் மட்டும் 286 பேருக்கு இன்று தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | மோடியை கோர்த்துவிட்ட ஓபிஎஸ்... கடுப்பில் டெல்லி?


இதுவரை 38 ஆயிரத்து 026 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்துள்ள சூழலில்  இன்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. 


 



அதேபோல், தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,313லிருந்து 2,694ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இன்று 208 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,18,866ஆக உள்ளது.


 



இன்று அதிகபட்சமாக சென்னையில் 286 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 119 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 39 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR