5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வதுள்ளதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.


அந்தவகையில் தமிழக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சிறுவயதிலேயே பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். பெற்றோர்களுக்கும் மாபெரும் மன அழுத்தமாக மாறும் என பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது.


இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசனை தற்போது வெளியிப்பட்டுள்ளது.