புதுடெல்லி: தமிழ்நாட்டில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமது. அதற்காக ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் தலா 325 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் மத்திய அரசு சார்பில் தலா 195 கோடியும், மாநில அரசு சார்பில் தலா 130 கோடியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் 900 மருத்துவ சீட் ஒதுக்கப்படும். அதில் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 85 சதவீதமும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 15 சதவீதமும் கிடைக்கும்.


இந்த ஆறு புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மொத்தம் 1950 கோடி செலவாகும். இதன்மூலம் தமிழகத்திற்கு மேலும் கூடுதலாக 900 எம்.பி.பி.எஸ் சீட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.