தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி பகுதியை சேர்ந்த தம்பதி ரவிக்குமார்-சுபிக்ஷா. இவர்களுக்கு 6 வயதில் டைசா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி, இப்போது ஒரு கின்னஸ் சாதனையை செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக சாதனை முயற்சி:


6 வயதான டைசா ரவிகுமார், தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சிறுமியான இவர், நீச்சலில் மிகுந்த ஆர்வமுடையவர். நீச்சலின் மீதிருந்த ஆர்வத்தால் அச்சிறுமி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். 5 மணி நேரம் இடைவிடாது நீரில் மிதப்பதுதான் அந்த உலக சாதனை முயற்சியாகும். இதற்காக, டைசா பல நாட்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். 


சாதனை படைத்த டைசா:


யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்ட் ஃபோரம் என்ற அமைப்பின் நடுவர் கின்னஸ் சுனில் ஜோசப் கண்காணிப்பில் தேனி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் டைசாவின் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. 5மணி நேரம் இடைவிடாது நீரில் மிதந்து  உலக சாதனை படைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால், மழை காரணமாக இந்த சாதனை முயற்சி முன்கூட்டியே நிறுத்தப்பட்டு விட்டது. இம்முயற்சி நிறுத்தப்பட்ட போதிலும், டைசா இடைவிடாது 4மணி நேரம் 18நிமிடங்கள் நீரில் மிதந்தார். இதனால், சிறுமி டைசா ரவிக்குமார் உலக சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் முக்கிய நிர்வாகி கைது..!


மேற்கு வங்க சிறுவனின் சாதனையை முறியடித்த டைசா:


டைசாவின் இந்த உலக சாதனைக்கு முன்பு  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7வயது சிறுவன் 30நிமிடங்கள் மட்டும்  இடைவிடாது நீரில் மிதந்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை சிறுமி டைசா ரவிக்குமார் முறியடித்துள்ளார்.‌ டைசா உலக சாதனை படைத்தற்காக யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்ட் ஃபோரம் அமைப்பினர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறுமியை கௌரவித்தனர். மேலும் தேனியை சேர்ந்த தன்னார்வலர்களும், பொதுமக்களும் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.


மாநில அளவில் போட்டியிட்ட டைசா:


6 வயதே நிரம்பிய சிறுமி டைசா, தனது அளப்பரிய நீச்சல் திறமையால் அனைவரையும் அசர வைத்தார். இந்த உலக சாதனைக்காக டைசா, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி மேற்காெண்டு வந்துள்ளார். டைசாவின் பெற்றோர்களும் சிறுமியை நன்றாக ஊக்கிவித்து நீச்சல் பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளனர். சிறுமி டைசா, மாநில அளவிளான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம்,வெள்ளி என பல பதக்கங்களையும் வாங்கி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஓ பன்னீர்செல்வத்தை வெக்கங் கெட்டவர்கள் என கூறிய அதிமுக கேபி முனுசாமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ