உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை இல்லை... உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி தேவாரத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு உரிய ராணுவ மரியாதை கொடுக்கப்படாமல் உடல் ஒப்படைத்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 04:25 PM IST
  • பஞ்சாப் பதிண்டா பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடந்தது.
  • தேனி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
  • அவர்களின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை இல்லை... உறவினர்கள் ஆர்ப்பாட்டம் title=

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில், நேற்று முன்தினம் (ஏப். 12) நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு இன்று கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியில் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது. 

இந்நிலையில் ராணுவ மரியாதை செலுத்தப்படாததால் உறவினர்களிடமும், கிராம மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜெயராஜ், ரத்தினம் தம்பதியின் மூன்றாவது மகன் யோகேஷ் குமார் இவர் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு இராணுவ பணியில் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க | பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள்! ராணுவ முகாமில் நடந்தது என்ன?

கடந்த புதன்கிழமை அன்று ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவந்த இராணுவத்தினர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். 

அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டிக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். ரெங்கநாதர் கோவில் மைதானத்தில்  கூடியிருந்த கிராம மக்களின் சார்பாக மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

அவரது இல்லத்தில் வைத்து அவரின் உடலுக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடலை, உறவினர்கள் நல்லடக்கம் செய்ய திட்டமிருந்தனர். 

இந்நிலையில், உரிய ராணுவ மரியாதை இல்லாததால் ராணுவ மரியாதை வழங்கும் வரை உடலை நல்லடக்கம் செய்ய மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் இல்லத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் வரும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் படிக்க | அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News