இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 6,986 பேருக்கு கொரோனா உறுதி..!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரிப்பு...!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரிப்பு...!
தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 6,911 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 75 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 6,986 பேரில் சென்னையில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 116 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 58) உள்ளன. அதில், இன்று மட்டும் 64,129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 23,51,463 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில்,4,215 பேர் ஆண்கள், 2,771 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,29,768 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 83,932 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 5,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,526 ஆக உள்ளது.
தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 85 பேர் உயிரிழந்தனர். அதில், 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,494 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,703 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 10,691 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,76,555 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26,477 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | Whatsapp மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான எளிய வழி இதோ!!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....
சென்னையில் 1,155 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 480 பேருக்கும், விருதுநகரில் 385 பேருக்கும், ராணிப்பேட்டையில் 367 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 363 பேருக்கும், தூத்துக்குடியில் 248 பேருக்கும், கோவையில் 220 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,315 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலையில் 681 பேரும், திருவள்ளூரில் 524 பேரும், தூத்துக்குடியில் 302 பேரும், சிவகங்கையில் 256 பேரும், மதுரையில் 249 பேரும், திருநெல்வேலியில் 231 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இன்று சென்னையில் 26 பேரும், மதுரையில் 8 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகரில் தலா 5 பேரும், திருநெல்வேலி, வேலூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் தலா 3 பேரும், ராமநாதபுரம், தென்காசி, தேனியில் தலா 2 பேரும், கோவை, தருமபுரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சியில் தலா ஒருவரும் என 85 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.